உள்துறை அமைச்சகம்
பத்ம விருதுகள் 2022-க்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம்
Posted On:
01 SEP 2021 3:55PM by PIB Chennai
2022 -ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கு (பத்ம விபூஷண், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) இணையதளம் வாயிலாக நியமனங்கள்/ பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15. https://padmaawards.gov.in/ என்ற பத்ம விருதுகளுக்கான இணையதளத்தில் மட்டுமே நியமனங்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பத்ம விருதுகளை “மக்களின் பத்மா” விருதாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. அதனால், அனைத்து குடிமக்களும், பெண்கள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், மாற்றுதிறனாளி நபர்கள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்கிறவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமையான நபர்களை அடையாளம் கண்டு தங்களது நியமனங்கள் / பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நியமனங்கள் / பரிந்துரைகள் மேற்கூறிய பத்ம விருது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி, விவரிப்பு வடிவத்தில் மேற்கோள் (அதிகபட்சம் 800 வார்த்தைகள்) உட்பட தொடர்புடைய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும். அவை பரிந்துரைக்கப்பட்ட நபர் அந்தந்த துறைகளில் செய்த தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (http://www.mha.gov.in/) விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் இது குறித்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விருதுகள் சம்பந்தமான விதிமுறைகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஏதேனும் சந்தேகங்கள்/ உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751080
----
(Release ID: 1751152)
Visitor Counter : 222