இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை டி.எஸ்.ராஜம் ரப்பர்ஸ் மற்றும் தின்ராமா மொபிலிட்டி சொல்யூஷன் நிறுவனம் ஆகியவை கொள்முதல் செய்ய இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 01 SEP 2021 12:09PM by PIB Chennai

போட்டி சட்டம், 2002-ன் 31 (1)வது பிரிவின் கீழ், டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை டி.எஸ் ராஜம் ரப்பர்ஸ் (கொள்முதல் நிறுவனம் 1), தின்ராமா மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் ( கொள்முதல் நிறுவனம் 2) ஆகியவை கொள்முதல் செய்ய இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

முன்மொழியப்பட்ட இந்த பரிவர்த்தனை, டார்கட் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை, முதலாம் மற்றும் இரண்டாம் கொள்முதல் நிறுவனங்கள் கூட்டாக கொள்முதல் செய்வதை உள்ளடக்கியது. இந்த பரிவர்த்தனை, சிடிபிக்யூ நிறுவனத்திடமிருந்து, இரண்டாம் நிலை கொள்முதல் மூலமாக மேற்கொள்ளப்படும்.

பங்குகளை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், டிவிஎஸ் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான துணை நிறுவனங்கள். இந்த நிறுவனம் திரு டி.எஸ் ராஜம் குடும்பத்துக்கு சொந்தமானது. டி.எஸ் ராஜம் குடும்ப உறுப்பினர்கள் டார்கட் நிறுவனத்தை செயல்படுத்துகின்றனர்.

டார்கட் பட்டிலியப்படாத பொது நிறுவனம். இது துணை நிறுவனங்களுடன் செயல்படுகிறதுஇந்நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாட்டில் பொருட்கள் / விநியோக  தீர்வு சேவைகளில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்த சிசிஐ-யின் விரிவான உத்தரவு இனிமேல் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751029

*******

(Release ID: 1751029)


(रिलीज़ आईडी: 1751064) आगंतुक पटल : 285
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati