நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22ஆம் நிதியாண்டுக்கான ஜூலை மாதம் வரையிலான, மத்திய அரசு கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

Posted On: 31 AUG 2021 4:18PM by PIB Chennai

2021ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திரக் கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முக்கிய அம்சங்கள்:

2021ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை, மத்திய அரசு ரூ.6,83,297 கோடி வருவாய் பெற்றுள்ளது ( நடப்பு வர்த்தக ஆண்டு 2021-22-இன் மொத்த வரவில் 34.6 சதவீதம்) இதில் வரிவருவாய் ரூ. 5,29,189 கோடி (மத்திய அரசின் நிகர வருவாய்), வரியற்ற வருவாய் ரூ. 1,39,960  கோடி மற்றும் ரூ.14,148 கோடி கடனற்ற முதலீட்டு வரவு. கடனற்ற முதலீட்டு வரவில், கடன்கள் மீட்பு ரூ.5,777 கோடி மற்றும் பங்கு விற்பனை நடவடிக்கைகள் மூலம் வரவு ரூ.8,371 கோடி. மத்திய அரசின் வரிப் பங்காக, 2021 ஜூலை வரை, மாநிலங்களுக்கு ரூ.  1,65,064 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மொத்தச் செலவு ரூ.10,04,440 கோடி ( நடப்பு வர்த்தக ஆண்டி 2021-22இல் 28.8 சதவீதம்). இதில் ரூ. 8,76,012 கோடி வருவாய்க் கணக்கிலிருந்தும், ரூ. 1,28,428 கோடி முதலீட்டுக் கணக்கிலும் செலவிடப்பட்டள்ளது. மொத்த வருவாய் செலவில்  ரூ. 2,25,817 கோடி வட்டி செலுத்துவதற்காகவும், ரூ.1,20,069 கோடி, முக்கியமான மானியங்கள் வழங்கவும் செலவிடப்பட்டுள்ளது.

----


(Release ID: 1750794) Visitor Counter : 198