எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் மின் தேவையை சந்திக்க என்டிபிசி நிறுவனம் எடுத்த நடவடிக்கை

Posted On: 30 AUG 2021 2:11PM by PIB Chennai

நாட்டின் மின் தேவை திடீரென அதிகரித்துள்ளது. மின்தொகுப்பின் தேவைக்கேற்ப, அதை நிவர்த்தி செய்ய, என்டிபிசி (தேசிய அனல் மின் நிலைய நிறுவனம்நிறுவனம் அனைத்து முயற்சிகளும் எடுத்துவருகிறதுஅதிகரித்துள்ள மின்தேவையை பூர்த்தி செய்ய என்டிபிசி நிறுவனம் தயாராகி வருகிறது. என்டிபிசி குழும நிலையங்களில் மின் உற்பத்தி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது

மின்சார தேவையை நிவர்த்தி செய்ய, கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

* நிலக்கரி கொள்கையில் நெகிழ்வான பயன்பாட்டின் கீழ், நிலக்கரி இருப்பு மோசமாக இருக்கும் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கிடைக்க என்டிபிசி ஏற்பாடு செய்கிறது.

நிலக்கரி பற்றாக்குறையாக இருக்கும் நிலையங்களுக்கு, நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கவும், நிலக்கரி ரயில் பெட்டிகளை மாற்றிவிடவும், கோல் இந்தியா மற்றும் ரயில்வேயுடன் என்டிபிசி தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

* முந்தைய ஒப்பந்தங்கள் மூலம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 2.7 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி நிலக்கரி அளவு அதிகரிக்கப்படுகிறது.

* 800 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள டார்லிபள்ளி இரண்டாவது மின்உற்பத்தி மையம் 01-09-2021 முதல் வர்த்தக ரீதியில் செயல்படவுள்ளது.

* என்டிபிசி நிறுவனத்தின் அனைத்து சுரங்கங்களில் இருந்தும் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது.

* எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ளும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஜெனரேட்டர் நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருட்களை ஏற்பாடு செய்வதற்கு திட்டமிட, ஒரு வாரத்துக்கு மின் விநியோகத்தை திட்டமிடும்படி மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

 

-----




(Release ID: 1750415) Visitor Counter : 191