குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
தேசிய சிறுதொழில் தினம்
Posted On:
30 AUG 2021 1:42PM by PIB Chennai
உலக நாடுகளைப் போல, இந்தியாவிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மதிப்பு சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது. ஒருபுறம் பன்முகத் தன்மை வாய்ந்த பொருட்களை வழங்கும் அதே வேளையில், மறுபுறம், பெரு நிறுவனங்களுக்காக இடைநிலை சரக்குகளை இந்த நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இந்தத் துறை, மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகவும் விளங்குகிறது.
சர்வதேச சந்தைகளை அணுகும் திறன் மற்றும் பெரிய சர்வதேச நிறுவனங்களின் துணை நிறுவனமாக செயல்படும் ஆற்றல் பெற்றுள்ள சுமார் 6.3 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன.
ஒட்டுமொத்த பங்களிப்பில் 45 சதவீதத்துடன் ஜவுளி, தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள், மருந்துகள், மோட்டார் வாகனங்கள், விலைமதிப்புள்ள கற்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் மிகச் சிறந்த வளர்ச்சிக்கான செயல்முறையை இந்திய பொருளாதாரம் வெளிப்படுத்தி வருவதன் மூலம் 2025-ஆம் ஆண்டிற்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்தி, உலகளவில் முன்னணி பொருளாதாரமாக வளரக்கூடும். ஒட்டுமொத்த தொழில்முனைவு வளர்ச்சிக்கான சூழலியலை வலுப்படுத்துவதற்காக முக்கிய முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இதுபோன்ற நிறுவனங்களை சர்வதேச மயமாக்குவதில் உள்ள தடைகள் குறித்தும் போதிய புரிதல் வேண்டும்.
இந்த வளர்ச்சியை நோக்கிய இடையறாத பணியில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் ஈடுபட்டு வருவதோடு, இந்தியாவில் இதுபோன்ற நிறுவனங்களுக்கான சூழலியலை மேம்படுத்தவும் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பொருள் மாற்றியமைப்பு, உதயம் முன்பதிவு முறை, சாம்பியன்ஸ் தளம், தேசிய பட்டியலின- பட்டியல் பழங்குடி முனையம், தற்சார்பு இந்தியா நிதி, கொள்முதல் கொள்கை உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750391
----
(Release ID: 1750408)
Visitor Counter : 322