எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துல்ஹஸ்தி மின்நிலையம் ஏற்பாடு செய்திருந்த ஆசாதி கா அமிர்த் மஹோத்ஸவ் நிகழ்ச்சியில், தொண்டு நிறுவனத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது

Posted On: 30 AUG 2021 9:23AM by PIB Chennai

துல்ஹஸ்தி மின்நிலையம்  ஏற்பாடு செய்திருந்த ஆசாதி கா அமிர்த் மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல்; பிரதமர் அலுவலகம்; பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், அணுசக்தித்துறை மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் மற்றும் தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. ஏ. கே. சிங் ஆகியோர் ணைந்து சேவா பாரதி தொண்டு நிறுவனத்திற்கு ஆம்புலன்ஸ் சாவியை வழங்கினர். இந்த ஆம்புலன்ஸ் துல்ஹஸ்தி மின்நிலையத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், தேசத்திற்கு சேவை செய்ய முன் வர வேண்டும் என்று  மக்களை ஊக்குவித்தார். கிஷ்ட்வார் மாவட்டத்தில் தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது மேற்கொண்டு வரும் திட்டங்களைப் பற்றிக் கூறுகையில் கிஷ்ட்வார் மாவட்டம் விரையில் மின் உற்பத்தியின் மையமாக மாறும் என்று கூறினார்.

****

(Release ID: 1750298)


(Release ID: 1750344) Visitor Counter : 198