வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரு மெட்ரோ ரயில் 2வது திட்டத்தின் மேற்கு விரிவாக்கம்: அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்

Posted On: 29 AUG 2021 3:39PM by PIB Chennai

மைசூர் சாலை முதல் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் வரை, 7.5 கி.மீ தூர, மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை முன்னிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு நம்ம மெட்ரோ 2வது திட்டத்தின் கீழ், மேற்கு விரிவாக்க திட்டம், மைசூர் சாலை முதல் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் வரை, 7.5 கி.மீ  தூரத்துக்கு அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய என்ஜின்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகளவில் உள்ளன. நாட்டின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் 38 சதவீதம் பெங்களூரில் இருந்து தான் நடைப்பெறுகிறது. இங்கு  மேற்கு விரிவாக்க மெட்ரோ ரயில் பாதை தொடங்கப்பட்டது, இது விரைவான மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்தை ஏற்படுத்தும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான தொலை நோக்கு திட்டத்தின் கீழ், நகர்ப்புறமயமாக்கல் நோக்கிய அணுகுமுறையில்  முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு உலகத் தரத்திலான உள்கட்டமைப்புகளை வழங்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று கூறினார்.

கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘‘அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிப்பதற்காக மத்திய அரசுக்கு நன்றி. மத்திய அரசின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், புதிய நகர்ப்புற மையங்களை உருவாக்குவதில் உள்ள சவால்களை கர்நாடகா வெல்லும். புதிய இந்தியாவுக்கான, புதிய கர்நாடகா, புதிய இந்தியா தொலைநோக்கு நனவாக உதவும்’’ என்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750160

*****************


(Release ID: 1750271) Visitor Counter : 317