ஆயுஷ்
வடகிழக்கில் ஆயுஷ் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதற்கான முக்கிய திட்டங்களை ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அறிவித்தார்
प्रविष्टि तिथि:
28 AUG 2021 4:42PM by PIB Chennai
வடகிழக்கில் பாரம்பரிய மருத்துவ செயல்முறைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கவுகாத்தியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இன்று அறிவித்தார்
ஆயுஷ் அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் ஆயுஷ் மற்றும் சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் அசாம் முதல்வர் டாக்டர் ஹேமந்த் பிஸ்வ சர்மா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆயுஷ் மற்றும் மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு இணை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய் காலுபாய், அசாம், நாகாலாந்து மற்றும் சிக்கிமின் சுகாதார அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் துறை தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தேசிய ஆயுஷ் திட்டத்தின் ஒரு பகுதியாக 1000 புதிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார். ஆயுஷ் முறைகளின் அடிப்படையில் முழுமையான ஆரோக்கிய அமைப்பை வழங்குவதே இம்மையங்களின் நோக்கமாகும். நாடு முழுவதும் மொத்தம் 12500 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைச்சகத்தால் நிறுவப்படும்.
ஆயுஷ் பாரம்பரிய மருந்துகளை பிரபலப்படுத்துவதற்காக தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் 100 ஆயுஷ் மருந்தகங்கள் வடகிழக்கு பகுதியில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
கவுகாத்தியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியை உயர்சிறப்பு மையமாக மேம்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ 10 கோடி ஒதுக்கப்படும். ஆயுஷ் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கான முன்மொழிதல்களை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749919
*****************
(रिलीज़ आईडी: 1749960)
आगंतुक पटल : 279