நிலக்கரி அமைச்சகம்
விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டம்: பிசிசிஎல் நிறுவனம் சார்பாக சிறப்பு கொவிட் தடுப்பூசி முகாம்
Posted On:
28 AUG 2021 12:47PM by PIB Chennai
விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் நாடு தழுவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நிலக்கரி அமைச்சகத்தின்கீழ் துணை நிறுவனமாக இயங்கும் மினி ரத்னா நிறுவனமான பாரத் கோகிங் கோல் நிறுவனம், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தன்பாத்தில் உள்ள அம்பேத்கர் தற்காப்புப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் நிறுவனத்தில் பணிபுரியும் 250 துப்புரவு பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டது.
கொவிட்-19 தொற்றின் தொடக்கம் முதல் நிறுவனத்தின் முதுகெலும்பாகப் பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள், நிறுவனத்தின் கொவிட்-19 மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்கள், அலுவலகங்கள், சுரங்கங்கள் போன்றவற்றில் இடையறாத சேவை வழங்குவதில் தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு கை சுத்திகரிப்பான் மற்றும் பருத்தி முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749826
*****************
(Release ID: 1749892)
Visitor Counter : 213