மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கோகுல் இயக்கம் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும்: திரு எல் முருகன்

Posted On: 27 AUG 2021 4:00PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, துறையின் தொழில்முனைதல் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொது சேவை மையங்களின் மூலமாக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை நடத்தியது. நாடு முழுவதும் கிராம அளவில் 2000 முகாம்கள் நடத்தப்பட்டன.

திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான இணையதளங்கள் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் பொது சேவை மையங்கள் வாயிலாக விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளிடையே உரையாற்றிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, சமீபத்திய அமைச்சரவை முடிவின் படி, தேசிய கால்நடை இயக்கம் மற்றும் தேசிய கோகுல் இயக்கம் ஆகியவற்றில் வளர்ப்பு பண்ணை தொழில்முனைவோர் மற்றும் தீவன தொழில்முனைவோருக்கான பகுதிகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஊரக தொழில்முனைதலை உருவாக்கி, வேலையில்லாத இளைஞர்களுக்கும், மாடு, பால், கோழி, ஆடு, பன்றி மற்றும் தீவன துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் வாய்ப்புகளை வழங்கி தற்சார்பு இந்தியாவுக்கு வழிவகுப்பதில் தேசிய கால்நடை இயக்கம் உதவும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் திரு எல் முருகன், விடுதலையின் அம்ரித் மகோத்சவம் இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேசிய கோகுல் இயக்கம் அதிக உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749550

*****************


(Release ID: 1749698)