சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு எம் எம் சுந்தரேஷ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
Posted On:
26 AUG 2021 7:35PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வி ஹிமா கோஹ்லி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி பெங்களூர் வெங்கடராமைய்யா நாகரத்னா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி திரு சுடலையில் தேவன் ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு எம் எம் சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி திருமிகு பேலா மதூர்யா திரிவேதி மற்றும் வழக்கறிஞர் திரு பமிடிகாந்தம் ஸ்ரீ நரசிம்மா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749324
----
(Release ID: 1749416)
Visitor Counter : 224