சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 223-வது நாள்: 61 கோடிக்கும் அதிகமானோருக்கு இது வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது
प्रविष्टि तिथि:
26 AUG 2021 7:55PM by PIB Chennai
இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 61 கோடிக்கும் அதிகமானோருக்கு (61,10,43,573) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, சுமார் 68 லட்சம் (67,87,305) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்கான இறுதி அறிக்கைகள் இன்று பின்னரவில் நிறைவு செய்யப்படும்.
இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 10356040 பேருக்கு முதல் டோசும், 8292060 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 18314022 பேருக்கு முதல் டோசும், 12854105 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 231895731 பேருக்கு முதல் டோசும், 23374357 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் 126391319 பேருக்கு முதல் டோசும், 51317222 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 84943408 பேருக்கு முதல் டோசும், 43305309 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 471900520 முதல் டோசுகளும் 139143053 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்று மட்டும் (2021 ஆகஸ்ட் 21), சுகாதார பணியாளர்களில் 508 பேருக்கு முதல் டோசும், 16779 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1937 பேருக்கு முதல் டோசும், 67981 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 3459041 பேருக்கு முதல் டோசும், 1027572 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் 858428 பேருக்கு முதல் டோசும், 647765 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 368200 பேருக்கு முதல் டோசும், 339094 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 4688114 முதல் டோசுகளும் 2099191 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றக்கூடிய கருவியாக தடுப்புமருந்து வழங்கல் இருப்பதால், உயர்மட்ட அளவில் அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749336
(रिलीज़ आईडी: 1749415)
आगंतुक पटल : 237