சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காச நோய் தடுப்பு கூட்டுக் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்பு
Posted On:
26 AUG 2021 4:40PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, காச நோய் தடுப்பு கூட்டுக் குழுவின் தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
2024-ஆம் ஆண்டு வரை அமைச்சர் இந்த பொறுப்பை வகிப்பார். ஐக்கிய நாடுகளின் காசநோய் இலக்கை 2022-ஆம் ஆண்டிற்குள் அடையவும், 2030-ஆம் ஆண்டிற்குள் காச நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் தருணத்தை அடையவும், காச நோய் தடுப்பு கூட்டு செயலகம், கூட்டாளிகள் மற்றும் காசநோய் சமூகத்தின் முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.
இந்த நிகழ்வின்போது பேசிய அமைச்சர் திரு மாண்டவியா, 2025-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முழுவதும் ஒழிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதித்தன்மையை மீண்டும் வலியுறுத்தினார். இந்தக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விடைபெறும் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு நன்றி தெரிவித்த திரு மன்சுக் மாண்டவியா, அவரது வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
காச நோய் தடுப்பு கூட்டுக் குழுவின் துணைத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள திரு ஆஸ்டின் அரின்ஸ் ஓபிஃபுனா-விற்கு உறுப்பினர்கள் வரவேற்பளித்தனர். அவர் ஜனவரி 1, 2022 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு துணைத் தலைவராக பொறுப்பு வகிப்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749251
---
(Release ID: 1749315)
Visitor Counter : 438