குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வருகையாளர் விருதுகள் 2021: மத்திய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted On: 25 AUG 2021 12:08PM by PIB Chennai

வருகையாளர் விருதுகள் 2021-காக, மத்திய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை இணையவழி விண்ணப்பங்களை வரவேற்கிறது. 1. புதிய கண்டுபிடிப்புகளுக்கான வருகையாளர் விருது, 2. ) மனிதவியல், கலை மற்றும் சமூக அறிவியல்; ) இயற்பியல் மற்றும் ) உயிரி அறிவியலில் ஆராய்ச்சிக்கான வருகையாளர் விருது, 3. தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வருகையாளர் விருது ஆகிய பிரிவுகளில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படும்.

www.presidentofindia.nic.in என்ற இணையதளத்தில் ‘7-ஆவது வருகையாளர் விருது 2021’ என்ற இணைப்பைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பதாரர்கள் இந்த விருதிற்காக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, அக்டோபர் 31, 2021. https://rb.nic.in/visitorawards என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களைக் காணலாம்.

 

மத்திய பல்கலைக்கழகங்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற பல்கலைக்கழகங்களுக்கு எழுச்சியூட்டுவதற்காகவும், கடந்த 2014-ஆம் ஆண்டு, வருகையாளர் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மத்திய பல்கலைக்கழகங்களின் வருகையாளர் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்குவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748793


(Release ID: 1748849) Visitor Counter : 225