இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்: இந்தியாவின் நீர் விளையாட்டு வீரர்கள் நம்பிக்கை
Posted On:
23 AUG 2021 5:49PM by PIB Chennai
டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில், சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவோம் என, நீர் விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும், இந்தியாவின் நீர் விளையாட்டுக்கள் குழுவில் 3 பேர் உள்ளனர். இதில் 2 பேர் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஆண்கள். ஒருவர் படகு போட்டியில் பங்கேற்கும் வீராங்கனை.
இவர்களில் சுயாஸ்ஜாதவ், பாரா ஒலிம்பிக் போட்டியில் 2வது முறையாக பங்கேற்கிறார். நிரஞ்சன் முகுந்தன் மற்றும் பிரச்சி யாதவ் ஆகியோர் முதல் முறையாக பங்கேற்கின்றனர்.
2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் சுயாஷ்ஜாதவ் பெற்ற வெற்றி அவரை டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் நுழைய வைத்தது. ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றதும், டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வைத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748299
*****************
(Release ID: 1748331)
Visitor Counter : 285