அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

காச நோயாளிகளிடையே கொவிட் தொற்று பாதிப்பு குறித்த ஆய்வை மேற்கொள்ள பிரிக்ஸ் நாடுகளுடன் இந்திய விஞ்ஞானிகள்* கூட்டு முயற்சி

Posted On: 23 AUG 2021 4:15PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை, பிரிக்ஸ் நாடுகளுடன் ஒருங்கிணைந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே தீவிர கொவிட்-19 தொற்றின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக சார்ஸ் கோவி 2 என்ஜிஎஸ்- பிரிக்ஸ் கூட்டமைப்பை செயல்படுத்தி வருகிறது.

சிறந்த நோய் மேலாண்மைக்காக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத நுரையீரல் காச நோய் நோயாளிகளில் இணை நோய் குறித்த தகவலை இந்த ஒருங்கிணைந்த ஆய்வு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் நாடுகளுடன் ஒருங்கிணைந்து சரியான பாதையில் செல்வதற்கான நடவடிக்கைகளைத் தமது துறை மேற்கொண்டு வருவதாக உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறினார். பிரிக்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு  http://brics-sti.org/ என்ற இணையதளத்தைக் காணவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748265

*****************



(Release ID: 1748306) Visitor Counter : 244