குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பெண்களின் கவுரவத்தை நிலைநிறுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 22 AUG 2021 6:05PM by PIB Chennai

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, ஒவ்வொருவரும் பெண்களின் கவுரவத்தை நிலைநிறுத்த  வேண்டும் என்றும், எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக பெங்களூரு வந்த திரு வெங்கையா நாயுடு, ராஜ்பவனில் பல்வேறு பள்ளிக் குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார். ரக்‌ஷா பந்தன் தினத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையேயான ஆழமான அன்பு மற்றும் மரியாதையின் சிறப்பு கொண்டாட்டம் ரக்‌ஷா பந்தன் என கூறினார். 

அனைவரையும் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளாக கருத வேண்டும் என மக்களை வலியுறுத்திய திரு. வெங்கையா நாயுடுஇது மக்களிடையே சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் மற்றும் நமது நாட்டை வலிமையாக்கும் என கூறினார்.

பழங்கால இந்திய குடும்பமுறையை பாராட்டிய அவர், இது மூத்தோர்களை மதிக்க கற்றுக் கொடுக்கிறது  மற்றும் இளம் வயதினர் இடையே பகிர்தல் மற்றும் கவனிப்பு உணர்வை வளர்க்கிறது என கூறினார். வீட்டில் சகோதரிகள் உற்சாகத்தையும் மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்ட அவர், குடும்ப உறவுகளை கொண்டாடும் பல விழாக்கள் உள்ளன என்றும் அவை ஒன்றாக இருக்கும்  பிணைப்பை வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார்.

அதற்கு முன்பாக, திரு வெங்கையா நாயுடு, ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, கொங்கனி, ஒடியா, பெங்காலி, அசாமி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் சுட்டுரையில் வெளியிட்டார். 

*****************


(रिलीज़ आईडी: 1748095) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Kannada