உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பாவ்நகர்-தில்லி வழித்தடத்தில் முதல் நேரடி விமான சேவையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா துவக்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
20 AUG 2021 6:07PM by PIB Chennai
பாவ்நகர்-தில்லி வழித்தடத்தில் முதல் நேரடி ஸ்பைஸ்ஜெட் விமான சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) ஆகியோர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு பிரதீப் கரோலாவுடன் இணைந்து காணொலி மூலம் துவக்கி வைத்தனர்.
புதுதில்லி ராஜீவ் காந்தி பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி முதன்மை விருந்தினராக காணொலி மூலம் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, "பாரம்பரிய நகரமான பாவ்நகரில் இருந்து தில்லிக்கு முதல் நேரடி விமான சேவையை துவக்கி வைப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். பண்டைய காலங்களில் இருந்து ஒட்டுமொத்த குஜராத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் இந்நகரம் முக்கிய பங்காற்றியுள்ளது. வைரம் வெட்டுதல், முலாம் பூசுதல் மற்றும் கப்பல் உடைத்தல் தொழிலில் முக்கிய மையமாக இந்நகரம் விளங்குகிறது. மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட 'உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம், உள்ளுரில் இருந்து உலகம் வரை' முன்னெடுப்புகளின் கலவையாக உள்ள இந்தியாவின் முக்கிய நகரமாக பாவ்நகர் விளங்குகிறது," என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747640
*****************
(रिलीज़ आईडी: 1747675)
आगंतुक पटल : 285