பாதுகாப்பு அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        திட்டமிடப்பட்ட கொள்முதல் தொடர்பான விவரங்களை பாதுகாப்புத்துறை / பாதுகாப்புப் படைகள் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடும் திட்டம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                20 AUG 2021 4:34PM by PIB Chennai
                
                
                
                
                
                
                திட்டமிடப்பட்ட கொள்முதல் தொடர்பான விவரங்களை பாதுகாப்புத்துறை / பாதுகாப்புப் படைகள் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடும் திட்டத்துக்கு,  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 
பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிடும் கொள்முதலுக்கான விவரங்கள் குறிப்பாக விலை, அளவு, தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவை குறித்து எளிதாக அறிய வேண்டும் என பாதுகாப்புத் தொழில்துறை நிறுவனங்கள் கூறுகின்றன. ஆர்டர்களை ஏற்கும் நிலையில் இந்த விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 
எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கவும், மூலதன கொள்முதல் நடவடிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்கவும், தொழில்துறையின்  விருப்பங்களை ஏற்கவும், கொள்முதல் தொடர்பான விவரங்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் / பாதுகாப்பு படைகளின் இணையதளம் ஆகியவற்றில் வெளியிடும் திட்டத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத்  சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார். 
பகிரப்படும் இந்த விவரங்கள், பாதுகாப்பு அம்சத்தை மனதில் வைக்கும் உணர்திறன்களுக்கு உட்பட்டது. 
வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் சமச்சீர் தன்மைக்கு இது முக்கியமான நடவடிக்கை. சரியான நேரத்தில் இந்த தகவல்களை அறிதல், பாதுகாப்பு தளவாட தொழில்துறைகளால், ஒரிஜினல் தளவாட தயாரிப்பு நிறுவனங்களுடன்  தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் செய்யவும், எதிர்பார்க்கப்படும் ஆர்டர்களுக்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரிக்கவும் வழிவகுக்கும். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747608
***************** 
 
 
                
                
                
                
                
                (Release ID: 1747671)
                Visitor Counter : 266