வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து அடிப்படை வசதிகளுடன் மலிவு விலை வீடுகளை உருவாக்க வேண்டும்: கருத்தரங்கில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் அழைப்பு

प्रविष्टि तिथि: 19 AUG 2021 5:38PM by PIB Chennai

அனைத்து அடிப்படை வசதிகளுடன் மலிவு விலை வீடுகளை உருவாக்க வேண்டும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் திரு துர்கா ஷங்கர் மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார்.

புது தில்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி நடத்திய அனைத்தும் உள்ளடங்கிய வீடுஎன்ற தேசிய கருத்தரங்கில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் திரு துர்கா ஷங்கர் மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்து வருவதால், ‘2047ம் ஆண்டில் இந்தியாஎன்ற பிரதமரின் தொலை நோக்கை அடைய, மலிவான விலையில் வாழக்கூடிய வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள வீட்டை உருவாக்க வேண்டும்.

நகர்ப்புற தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் தேவைகளை மனிதில் வைத்து வீடுகளை உருவாக்க வேண்டும். இனிமேல் சேரிகள் இருக்க கூடாது. தற்போதுள்ள சேரிகளும், அனைத்தும் உள்ளடங்கிய வீடுகளின் வளர்ச்சிக்கு வழிவிட வேண்டும். மறு சீரமைப்பு மூலம் சேரிகள் அகற்றப்பட்டு நகரங்கள் புதுப்பொலிவு பெற வேண்டும். பிரதமரின் ‘2047ம் ஆண்டில் இந்தியாஎன்ற தொலைநோக்கு கனவை நனவாக்க நாம் பணியாற்ற வேண்டும்.  

 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்ல, தொடர் கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம், நாடு முழுவதும் மக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டை அளிக்கிறது. அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நாம் அடையும்போது, அது புதிய இந்தியாவின் தொடக்கமாக இருக்கும்.  பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம், வீடுகளை மட்டும் கட்டவில்லை, துப்புரவு, தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு, கழிவறை போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்கும்.

இவ்வாறு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் திரு துர்கா ஷங்கர் மிஸ்ரா பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747398

*****************


(रिलीज़ आईडी: 1747455) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi