எரிசக்தி அமைச்சகம்

வரைவு மின்சார (தாமத கட்டணத்திற்கான அபராதம்) திருத்த ஆணை, 2021 வெளியீடு

Posted On: 19 AUG 2021 2:56PM by PIB Chennai

வரைவு மின்சார (தாமத கட்டணத்திற்கான அபராதம்) திருத்த ஆணை, 2021-ஐ மத்திய எரிசக்தி அமைச்சகம் இன்று வெளியிட்டு, அதன் மீதான கருத்துக்களைக் கோரியுள்ளது. இந்த வரைவு ஆணை, அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கான சில்லரை கட்டணத்தை குறைப்பதற்காகவும், விநியோக உரிமதாரரின் சுமையை குறைப்பதற்காகவும் எரிசக்தி அமைச்சகம் மேலும் ஓர் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தொகையை மீட்பதற்காக எரிசக்தியை  மூன்றாம் தரப்பிடம் விற்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விநியோக உரிமதாரரின் நிலையான கட்டண சுமை குறைக்கப்படுகிறது.

மேலும் நிலுவைத் தொகையை செலுத்த முடியாத காரணத்தால் தாமத கட்டணத்திற்கான  அபராத சுமையையும் விநியோக உரிமதாரர்  எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உற்பத்தித் திட்டங்களில் முதலீட்டாளரது  நம்பிக்கையை அதிகரிக்கவும், உரிமதாரரின் சுமையைக் குறைக்கவும், கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதன்படி, முதன்முதலில் கொள்முதல் செய்யும் உரிமதாரரிடமிருந்து கட்டணம் முதலில் பெறப்படும்.  அதைத் தொடர்ந்து செலுத்துபவர்களிடமிருந்து அதே வரிசையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

மின்சார நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த எரிசக்தியின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரைவு ஆணையை இங்கே காணலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/aug/doc202181911.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747362

*****************



(Release ID: 1747378) Visitor Counter : 203