எரிசக்தி அமைச்சகம்

டிஸ்காம் நிறுவனங்கள் 2021-ம் நிதியாண்டில் ரூ.90,000 கோடி இழப்பை சந்திக்கும் என்ற யூகங்கள், ஊதி பெரிதாக்கப்பட்டதுபோல் தெரிகிறது : மின்துறை அமைச்சகம் விளக்கம்

Posted On: 18 AUG 2021 12:51PM by PIB Chennai

இந்தியாவில் மின் விநியோகத் துறை, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது, ஆனால், மின்துறையில்  மதிப்பு சங்கிலி பலவீனமான தொடர்பை கொண்டுள்ளதுமின்துறை  செயல்பாட்டில் முன்னேற்றமான அறிகுறிகளை கண்டுள்ளது, மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் டிஸ்காம் நிறுவனங்கள் மேற்கொண்ட, பல முயற்சிகளால் மின்துறையின் திறனும் அதிகரித்துள்ளது.

மின் விநியோக பயன்பாடுகளின் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர கணக்குகளின் படி, டிஸ்காம் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் செயல்பாடு மற்றும் நிதி செயல்பாட்டில்  முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன:

2016-17 நிதியாண்டில், மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகள் 23.5 சதவீதத்திலிருந்து,  2019-20 நிதியாண்டில் 21.83% ஆக குறைந்துள்ளது.

சராசரி விநியோகச் செலவு (ACS) மற்றும் சராசரி வருவாய் (ARR) ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி, 2016-17ல்  ரூ. 0.33/கிலோ வாட் -லிருந்து 2019-20ல் 0.28/ கிலோ வாட்ஆகக் குறைக்கப்பட்டது.

எதிர்மறையாக இருந்த வரிக்குப் பிந்தைய வருவாய் (PAT) 2016-17 நிதியாண்டில் ரூ .33,894 கோடியிலிருந்து 2019-20 நிதியாண்டில் ரூ .32,898 கோடியாக முன்னேற்றம் கண்டுள்ளது.

டிஸ்காம் நிறுவனங்கள் 2021ம் நிதியாண்டில் ரூ.90,000 கோடி அளவுக்கு இழப்பை சந்திப்பது தொடர்பாக சில ஊடகங்கள் யூக செய்திகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளனஇந்த யூகங்கள்மின் விநியோகத் துறையில் ஐசிஆர்ஏ  என்ற மதிப்பீடு நிறுவனம்  கடந்த 2021 மார்ச்சில்  வெளியிட்ட  ஒரு அறிக்கையை வைத்து வெளியிடப்பட்டுள்ளன

இந்த அறிக்கை 2019-ம் நிதியாண்டில்  வரிக்குப் பிந்தைய லாபம் எதிர்மறையாக ரூ. 50,000 கோடியைக் குறிக்கும் போது,  2020-ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபத்தின்  புள்ளிவிவரங்களின் கணிப்புகள் எதிர்மறையாக ரூ. 60,000 கோடி வரை அதிகரிக்கின்றன. இந்த அறிக்கை, இந்த இழப்புகளை மிகைப்படுத்தி, டிஸ்காம் நிறுவனங்கள் 2021-ம் நிதியாண்டில் ரூ.90,000 கோடி இழப்பை சந்திக்கும் என கூறுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக 2020-21ம் ஆண்டில் மின்சாரத்தின் விற்பனை குறைந்ததும், இந்த யூகங்களுக்கு ஒரு காரணம்.

டிஸ்காம் நிறுவனங்கள் கடந்த 2020 மார்ச் முதல் டிசம்பர் வரைகடன் அளித்தவர்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி ரூ.30,000 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இது பணப் புழக்க பிரச்சினையால் ஏற்பட்டது. ஆனால், இது டிஸ்காம் நிறுவனத்தின் 2021ம் நிதியாண்டில் கூடுதல் இழப்பாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மைகள் முற்றிலும் மாறாக  உள்ளன.  2020 ஆம் நிதியாண்டுக்கான உண்மையான  வரிக்கு பிந்தைய லாபம், ஐசிஆர்ஏ தெரிவித்த எதிர்மறையான  ரூ.60,000 கோடியில்  கிட்டத்தட்ட பாதி ஆகும்இதன் மூலம் 2020ம் நிதியாண்டில் ஐசிஆர்ஏ  மதிப்பீடுகள் கணிசமாக குறைபாடுடையவை என்பதைக் குறிக்கிறது. மேலும், கொவிட் காரணமாக மேலும் ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகஐசிஆர்ஏ தவறாக மதிப்பிட்டுள்ளது

ஐசிஆர்ஏ-வின் தவறான கணிப்புகள் காரணமாக, 2021ம் நிதியாண்டில் டிஸ்காம் நிறுவனங்களின், இழப்பு ரூ.90,000 கோடியாக ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளதுஇந்த தவறான புள்ளி விவரங்கள் அடிப்படையில்ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746899

******

(Release ID: 1746899)



(Release ID: 1746926) Visitor Counter : 243