எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு அமைச்சகத்தின் செய்ல் நிறுவனம் விடுதலையின் அம்ரித் கொண்டாட்டங்களில் பங்கேற்றது
Posted On:
17 AUG 2021 5:15PM by PIB Chennai
எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனம் விடுதலையின் அம்ரித் கொண்டாட்டங்களில் பங்கேற்றது. அதன் பல்வேறு ஆலைகள் மற்றும் அலகுகளில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
செய்ல் நிறுவனத்தின் ரூர்கேலா ஆலையில் 2021 ஆகஸ்ட் 12 அன்று மாபெரும் மரம் நடு விழா நடைபெற்றது. மூத்த குடிமக்கள், யோகா குழுக்கள், கொரோனா வீரர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், சிஐஎஸ்எப் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகைகளிலான 325 பூச்செடிகள் நடப்பட்டன. மரம் நடுதல் தொடர்ந்து நடைபெறும். நாட்டின் 75-வது வருட சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் மேலும் பல நிகழ்ச்சிகளையும் இந்த ஆலை திட்டமிட்டுள்ளது.
நாடு தழுவிய ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டத்திலும் செய்ல் நிறுவனத்தின் ரூர்கேலா ஆலை பங்கேற்றது. இதில் பங்கேற்ற அனைவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக உறுதி ஏற்றனர்.
மேலாண்மைப் பயிற்சி பெறுபவர்களுக்காக இந்தியா@75 எனும் விநாடி வினா நிகழ்ச்சி மனிதவள மேம்பாட்டு மையத்தில் நடத்தப்பட்டது. கவிதைப் போட்டி ஒன்றும் ஆன்லைன் மூலம் ஆட்சிமொழித் துறையால் நடத்தப்பட்டது. மகளிருக்கான ஹாக்கி போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது.
செய்லின் பொக்காரோ ஆலையிலும் ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் நடைபெற்றது. மூத்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் நிர்வாகப் பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746712
----
(Release ID: 1746780)
Visitor Counter : 314