அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அரசு சேகரித்த புவிசார் தரவுகள் இந்திய மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் செயலிகள் தொடக்கம்

Posted On: 17 AUG 2021 4:51PM by PIB Chennai

அரசு சேகரித்த புவிசார் தரவுகள் இந்திய மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு இலவசமாகவும், எளிதாகவும் கிடைக்கும் வகையில் மூன்று ஆன்லைன் செயலிகள் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளன- சர்வே ஆஃப் இந்தியா (எஸ்ஓஐ) புவிசார் தரவுகள் வழங்கல் தளம், எஸ்ஓஐ-யின் சாரதி: இணைய புவிசார் தகவல் செயலி மற்றும் மன்சித்ரன்: தேசிய அட்லஸ் மற்றும் வரைபட நிறுவனத்தின் (நாட்மோ) தொழில் புவிதளம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

இணையதளங்களைத் திறந்து வைத்துப் பேசிய இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர், பேராசிரியர் அசுதோஷ் சர்மா, “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். எஸ்ஓஐ-யில் இருந்து நாட்மோ வரை அரசு சேகரித்தத் தரவுகள் முதல் முறையாக இந்திய மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு இலவசமாகவும், எளிதாகவும் கிடைக்கவிருக்கின்றன,” என்றார்.

மேலும் பேசிய அவர், “எஸ்ஓஐ மற்றும் நாட்மோவின் பயணத்தில் இது ஒரு மைல் கல் நிகழ்வாகும். தரவுகளின் உண்மையான ஜனநாயகப்படுத்தலை இது குறிக்கிறது,” என்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறினார்.

“2021 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புவிசார் கொள்கை அளவீடு மற்றும் வரைபடமாக்கலில் இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது. இதன் மூலம் கடந்த காலத்தின் தடைகள் ஒரே நடவடிக்கையின் மூலம் களையப்பட்டன. புவிசார் தரவுகளைப் பரவலாக்கி, ஜனநாயகபப்டுத்துவதன் மூலம், ரூ 1 லட்சம் கோடிக்கான நேரடிப் பலன் 2030-க்குள் உண்டாகி, நமது பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய மறைமுகப் பலனளிக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746703

 

-----



(Release ID: 1746772) Visitor Counter : 266