நிலக்கரி அமைச்சகம்
விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டங்கள்: நிலக்கரி அமைச்சகம் சார்பாக “மரம் நடும் திட்டம் - 2021”
Posted On:
17 AUG 2021 2:39PM by PIB Chennai
“பசுமைக்கு மாறுவோம்” என்ற திட்டத்தின் கீழ் 2385 ஹெக்டர் பரப்பளவிலான பகுதிகளை பசுமையாக மாற்ற நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.
அந்த வகையிலும், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், “மரம் நடும் திட்டம் 2021-ஐ” மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் ரயில்வே துறைகளின் இணை அமைச்சர் திரு ராவ்சாஹேப் பாட்டில் தான்வே முன்னிலையில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கி வைப்பார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றி சுமார் 300 தோட்டப்பகுதிகள் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம், சுரங்க இயக்கங்களில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஏற்படவும், நிலக்கரித் துறையில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் உரிமங்களைப் பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். மேலும் தங்கள் பகுதிகளில் மரம் நடும் முன்முயற்சிகளை மேற்கொள்ள சமூகத்திற்கும், சாமானிய மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த திட்டம் செயல்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746648
----
(Release ID: 1746687)