தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கங்கை நதியின் பெருமைகளை விளக்கும் பயணத்தொடர் நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகிறது :
4 ஆண்டுகளில் அதிகம் பார்க்கப்படும் சேனலாக தூர்தர்ஷன் மாறும் : திரு அனுராக் தாகூர்
Posted On:
16 AUG 2021 6:32PM by PIB Chennai
இன்னும் 4 ஆண்டுகளில் மக்கள் அதிகம் பார்க்கும் சேனலாக தூர்தர்ஷன் மாறும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ‘ராக் ராக் மே கங்கா’ என்ற பயணத் தொடர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் அடைந்தது. இதில் கங்கை நதியின் சுற்றுச்சூழல், தூய்மை மற்றும் அதன் பெருமைகள் குறித்து பகுதி, பகுதியாக விளக்கப்பட்டது. இதன் 2ம் பாகத்தை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவாத், இத்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேசுகையில், ‘ராக் ராக் மே கங்கா’ முதல் பாகத்தை 1.75 கோடி பேர் பார்த்தனர். அதன் வெற்றிதான் இந்நிகழ்ச்சியின் 2வது பாகம். இதில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிகழ்ச்சிககு காரணமானவர்களை மத்திய அமைச்சர் பாராட்டினார். இது நிகழ்ச்சி மட்டும் அல்ல, மக்கள் பங்களிப்பை, மக்கள் இயக்கமாக மாற்றும் முயற்சி.
அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில், அதிகம் பார்க்கப்படும் சேனலாக தூர்தர்ஷன் மாறும். நேயர்களை ஈர்க்க சரியான நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் கொண்டு வரும்.
‘ராக் ராக் மே கங்கா’ பயணத் தொடர் நிகழ்ச்சியின் 2ம் பாகம், இந்த பெரிய நதியின் கலாச்சார, புராண, வரலாற்று மற்றும் சமூக-பொருளாதார விவரங்களை தெரிவிக்கும். 26 அத்தியாயங்களை கொண்ட இந்த பயணத் தொடர் நிகழ்ச்சியை, பிரபல நடிகர் ராஜீவ் கந்தேல்வால் தொகுத்து வழங்குகிறார். 2021 ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், டிடி நேஷனல் சேனலில் இந்நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் கூறுகையில், ‘‘ 3 ஆண்டு குறுகிய காலத்துக்குள், முதல் 10 தூய்மை நதிகளில் ஒன்றாக கங்கை நதியை மத்திய அரசால் கொண்டு வர முடிந்திருக்கிறது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், ‘ராக் ராக் மே கங்கா’ நிகழ்ச்சியின் 2ம் பாகம், நமது நாகரீகத்துக்கு அடித்தளம் அமைத்த அர்த்-கங்கா நதிக்கு சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746434
*****************
(Release ID: 1746434)
(Release ID: 1746493)
Visitor Counter : 277