சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் ‘அம்ரித் மகோத்சவத்தின்’ கீழ் 75 ‘ஹுனார் ஹாட்’ நடத்தப்படும்: திரு முக்தார் அப்பாஸ் நக்வி
Posted On:
16 AUG 2021 2:58PM by PIB Chennai
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் ‘அம்ரித் மகோத்சவத்தின்’ கீழ் நாடு முழுவதும் நடத்தப்படவிருக்கும் 75 ‘ஹுனார் ஹாட்’ மூலம் 7.50 லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
மத்திய சிறுபான்மை நலன் அமைச்சகத்தின் ‘வக்ப் தரக்கியாட்டி திட்டம்’ மற்றும் ‘பிரதமரின் ஜன் விகாஸ் திட்டம்’ ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் உள்ள காலி வக்ப் இடங்களில் ‘அம்ரித் மகோத்சவ் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று திரு நக்வி கூறினார்.
‘உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம்’ எனும் உறுதிப்பாட்டுடன் நாடு முழுவதும் நடத்தப்படவிருக்கும் 75 ‘ஹுனார் ஹாட்’ மூலம் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.
‘ஹுனார் ஹாட்’-டில் ‘பவார்ச்சிகானா’ எனும் பிரிவு இருக்குமென்றும், அதில் நிபுணர்கள் சமைக்கவிருக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளின் உணவு வகைகளை மக்கள் சுவைக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார். ஒவ்வொரு மாலையும் ‘ஹுனார் ஹாட்’-டில் புகழ்பெற்ற கலைஞர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746351
*****************
(Release ID: 1746437)
Visitor Counter : 338