குடியரசுத் தலைவர் செயலகம்
பார்சி புத்தாண்டு நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
Posted On:
15 AUG 2021 6:46PM by PIB Chennai
பார்சி புத்தாண்டு நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘பார்சி புத்தாண்டு தருணத்தில், நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பார்சி சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக மற்றும் தேசிய வாழ்வில், பார்சி இனத்தவரின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது. அவர்களின் வாழ்க்கை முறை, பணியாற்றும் முறை, கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர்களின் அசைக்க முடியாத ஈடுபாடு ஆகியவை பார்சி இனத்தவர் பற்றி நாட்டு மக்களிடையே பாராட்டும் உணர்வை தூண்டுகிறது. பார்சி இனத்தவரால் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு, அவர்களுக்கும், நம் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அளிக்கும் தருணம்.
இந்த பார்சி புத்தாண்டு விழா, ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒற்றுமை, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் மற்றும் மக்களிடையே பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தட்டும்’’.
-----
(Release ID: 1746197)
Visitor Counter : 173