பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப்படையின் பைலட் விங் கமாண்டர் உத்தர் குமாருக்கு வாயு சேனா பதக்கத்தை வழங்கினார் குடியரசுத் தலைவர்

प्रविष्टि तिथि: 15 AUG 2021 9:00AM by PIB Chennai

இந்திய விமானப்படையின் பைலட் விங் கமாண்டர் உத்தர் குமார், கடந்த 2017 ஜூலை மாதம் முதல் சுகோய்-30 ரக போர் விமானத்தின் விமானியாக பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 4 2020 அன்று, வானில் பறந்து கொண்டே தமது விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மற்றொரு சுகோய்-30 ரக போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு நிரப்பும் குழாய் உடைந்து போனது. எனினும் குழாயின் ஒரு முனை விங் கமாண்டர் உத்தர் குமாரின் விமானத்தில் தொடர்ந்து பொருத்தியிருக்க, எரிவாயு கசியும் அபாயம் ஏற்பட்டது. மேலும் எரிவாயு குழாய் உடைந்த விமானத்தின் சீரான இயக்கமும் தடைப்பட்டது. இது போன்ற எதிர்பாராத அபாய நிலையை உணர்ந்து எரிவாயு கசிவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமான பணியாளர்களுக்கு விங் கமாண்டர் உத்தர் குமார் உடனடியாக ஆலோசனை வழங்கினார். மிகக் கவனமாகத் திட்டமிட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். அவரது பாராட்டத்தக்க வீரம் மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் மிகப்பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டதுடன், 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

இந்த போற்றுதலுக்குரிய வீர தீர செயலுக்காக விங் கமாண்டர் உத்தர் குமாருக்கு வாயு சேனா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745961

 

-----


(रिलीज़ आईडी: 1746080) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu