சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இணையதளம் வாயிலான பயிற்சி தளத்தை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார்

प्रविष्टि तिथि: 14 AUG 2021 4:16PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சமூக பாதுகாப்பு தேசிய நிறுவனம் உருவாக்கி உள்ள தபஸ் (உற்பத்தித் திறன் மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி) என்ற இணையதளத்தை இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திருமிகு சுஷ்ரி பிரதிமா பௌமிக் ஆகியோர் முன்னிலையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.

நேரடி வகுப்புகளுக்குக் கூடுதல் வலு சேர்க்கும் வகையில் கற்பித்தலின் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல், துறை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் சொற்பொழிவுகள், பாடங்கள் சம்பந்தமான விஷயங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதே இந்த தபஸ் முன்முயற்சியின் நோக்கமாகும்

பயிற்சிகளை வழங்கி அறிவையும் பங்கேற்பாளர்களின் திறன் கட்டமைப்பிற்கான திறன்களை மேம்படுத்துவதும் இந்த பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்துவதற்கான நோக்கம். தங்களது அறிவை வளர்க்க விரும்பும் எவரும் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமூகப் பாதுகாப்பு தேசிய நிறுவனத்தின் குழுவினரைப் பாராட்டிய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூகப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஏராளமான மக்களை சென்றடைய இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுத்தல், முதியோர் பராமரிப்பு, திருநங்கைகள் மற்றும் பிச்சை எடுப்பதைத் தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த மேம்பட்ட புரிதலுக்காக அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையுமாறு அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின்போது இணையதளம் வாயிலான கல்வி மேலாண்மை முறை குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745781

*****************


(रिलीज़ आईडी: 1745870) आगंतुक पटल : 355
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi