எரிசக்தி அமைச்சகம்
மின் நிதி கார்பரேஷன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் 28 சதவீதம் அதிகரிப்பு
Posted On:
12 AUG 2021 5:36PM by PIB Chennai
மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மின் நிதி கார்பரேஷன்(பிஎப்சி) நிறுவனம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபமாக 28 சதவீத உயர்வை கண்டுள்ளது.
2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் முக்கிய அம்சங்கள்:
தனிப்பட்ட லாபம்:
பிஎப்சி நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக 34 சதவீத உயர்வை கண்டது. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் வரிக்கு முந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.2,274 கோடி. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,700 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருவாய் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வட்டி வருவாய் ரூ.3,525 கோடி. இது கடந்தாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,073 கோடியாக இருந்தது.
இடைக்கால ஈவுத் தொகை ஒரு பங்குக்கு ரூ.2.25 அறிவிக்கப்பட்டது.
லாபம் அதிகரித்துள்ளதால், பிஎப்சி நிறுவனத்தின் மதிப்பு 17 சதவீதம் அதிகரித்து ரூ.54,739 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.49,940 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்த லாபம்:
பிஎப்சி நிறுவனம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபம் 28 சதவீதம் அதிகரித்து ரூ.4,555 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,557 கோடியாக இருந்தது.
பிஎப்சி நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் 12 சதவீதம் அதிகரித்து இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,965 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.16,914 கோடியாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745177
----
(Release ID: 1745280)
Visitor Counter : 182