சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

விடுதலையின் அம்ருத் மகோத்சவம்: எச்ஐவி, காசநோய் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

Posted On: 12 AUG 2021 4:50PM by PIB Chennai

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, எச்ஐவி, காசநோய் மற்றும் ரத்த தானம் பற்றிய முதல் கட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்தார். அப்போது இத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உடன் இருந்தார். இந்நிகழ்ச்சியை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்தியது.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களுடன்  காணொலி காட்சி மூலம் பங்கேற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார்முகநூல், யூ டியூப், டிவிட்டர் போன்ற பல தளங்களில் இருந்து மாணவர்கள்  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எச்ஐவி, காசநோய் மற்றும் தலசீமியாவால் முன்பு பாதிக்கப்பட்ட மூன்று பேர்இந்த நோய்களுக்கு எதிரான போராட்டத்தில், அரசு திட்டங்கள் எவ்வாறு உதவின என்பது குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  

நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி உற்சாகம் தெரிவித்த மத்திய அமைச்சர்சுதந்திரத்துக்கு முன்பே இளைஞர்களின் சக்தியை முதலில் கண்டறிந்து வளர்த்தவர் சுவாமி விவேகானந்தர்’’ என கூறினார்அவரைப் பின்பற்றி, இளைஞர்கள் பயனடைவதற்காக, பிரதமர் திரு நரேந்திரமோடி பல திட்டங்களையும், நிறுவனங்களையும் தொடங்கினார். திறன் மேம்பாட்டு அமைச்சகமும் பல திட்டங்களை தொடங்கியது. கேலோ இந்தியா திட்டமும் தொடங்கப்பட்டது என மத்திய அமைச்சர் கூறினார்.  

இளைஞர்கள் ஏதாவது செய்ய எண்ணும்போது, அவர்கள் சாதிக்கின்றனர். காசநோயாளிகளில் பலர், இளம் தலைமுறையினர்.

கிராமங்களில் உள்ள

இளைஞர்கள் மனது வைத்தால், கிராமத்தில் காசநோயாளிகளே இருக்கமாட்டார்கள். அவர்கள் சாதனை படைப்பார்கள் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தி, ரத்ததான முகாம்களை நடத்திய தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை அவர் பாராட்டினார்.

நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் முடிவெடுக்கும் வழிகளை வழங்குவதில் மத்திய அரசு எவ்வாறு விடா முயற்சியுடன் தொடர்ந்து செயல்படுகிறது என்பதை மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பவார் விவரித்தார். தேசிய கல்விக் கொள்கை, இந்தியாவை உலகளாவிய அறிவு சக்தியாக மாற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்நமது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் நமது முயற்சியை சக்திவாய்ந்த இளைஞர்கள் நிறைவேற்றுவர் என அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் நல்ல சுகாதாரம் மற்றும் நலனை வழங்குவதுதான் மூன்றாவது நிலையான இலக்கு என அவர் கூறினார். சுதந்திர இந்தியாவின் பவள விழா, புதுப்பிக்கப்பட்ட இந்தியா 2.0வின் சக்தி மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745157

                                                                        -------



(Release ID: 1745256) Visitor Counter : 261