பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படை மற்றும் சவுதி அரேபியா கடற்படை இடையே முதல் முறையாக அல்-மொகத் அல்-ஹிந்தி பயிற்சி தொடங்கவுள்ளது

Posted On: 12 AUG 2021 2:10PM by PIB Chennai

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல், சவுதி அரேபியா சென்றுள்ளது.

இந்திய கடற்படையின் மேற்கு மண்டல தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் அஜய் கொச்சர், சவுதி அரேபியா கடற்படையின் கிழக்கு மண்டல தலைமையகமான கிங் அப்துல் ஆசிஸ் கடற்படை  தளத்துக்கு சென்று, சவுதி கடற்படையின் கிழக்கு  மண்டல தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் மஜித் அல் குவாதானியை கடந்த 10ம் தேதி சந்தித்து பேசினார்அதன்பின் அவர், கிங் ஃபகத் கடற்படை அகாடமிக்கு சென்று, அதன் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஃபசல் பின் ஃபகத் அல் குபைலியை சந்தித்து பேசினார்.

சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் டாக்டர் அவுசப் சயீத், அல் ஜூபைல் நகரில் ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பலில், இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேட்டியளித்தார்

அதன்பின்  ரியர் அட்மிரல் அஜய் கொச்சர் மற்றும் இந்திய தூதர் டாக்டர் அவுசப் சயீத் ஆகியோர், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண ஆளுநர்  சவுத் பின் நயப் அல் சவுத்தை டாமம் நகரில் சந்தித்து பேசினர்.

இரு நாட்டு கடற்படை இடையே முதல் முறையாகஅல்-மொகத் அல் - ஹிந்திபயிற்சி தொடங்கவுள்ளதால், ஒருங்கிணைந்த கூட்டம் நடத்துவதற்காகஅல் ஜூபைல் நகரில் உள்ள கிங் அப்துல் ஆசிஸ் கடற்படை தளத்தில், இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் சந்தித்து பேசினர்இருநாட்டு கடற்படையின் செயல்பாட்டு நடைமுறைகள் பற்றி ஆழ்ந்த புரிதலுக்காக, விரிவுரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் இருநாட்டு கடற்படை நிபுணர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

 

------(Release ID: 1745135) Visitor Counter : 125