வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய பொது கொள்முதல் கூட்டத்தின் ஐந்தாவது பதிப்பு

Posted On: 11 AUG 2021 1:04PM by PIB Chennai

அரசு மின்னணு சந்தை தளம், இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து தேசிய பொது கொள்முதல் கூட்டத்தின் ஐந்தாவது பதிப்பு ஆகஸ்ட் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், “தொழில்நுட்பத்துடன்  கூடிய அரசு கொள்முதல்-தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை நோக்கிஎன்ற கருப்பொருளில் நடைபெற்றது.

வர்த்தகத் துறையின் செயலாளரும் அரசு மின்னணு சந்தை தளத்தின் தலைவருமான திரு பி.வி.ஆர் சுப்ரமணியம் முன்னிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல்ஆகஸ்ட் 9-ஆம் தேதி காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

துவக்க உரை நிகழ்த்திய அமைச்சர், நாட்டில் பொது கொள்முதல் சூழலை மாற்றி அமைப்பதில் அரசு மின்னணு சந்தை தளம் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார். உள்ளடக்கத்தில் அதிக கவனம் செலுத்தும் மின்னணு சந்தை தளத்தின் முக்கிய நோக்கம் பற்றி அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் பொருட்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை முன்னிறுத்தி, தற்சார்பு இந்தியா கொள்கைக்கு ஆதரவளித்து அதுகுறித்த ஆராய்ச்சிகளில் அரசு மின்னணு சந்தை தளம் ஈடுபடுவதுடன் நாட்டில் மேக் இன் இந்தியா சூழலுக்கும் உத்வேகம் அளிக்க வேண்டும் என்று  திரு பி.வி.ஆர் சுப்ரமணியம் யோசனை தெரிவித்தார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் மின்னணு தளம் வாயிலாக விற்பனையாளர்கள் தங்களது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் வாங்குவோர், விற்போர், தொழில்துறையினர் உள்ளிட்டோர் கலந்துரையாடுவதற்கு ஓர் சிறந்த வாய்ப்பை இந்த வருடத்தின் கூட்டம் வழங்கியது. அரசு மின்னணு சந்தை தளத்தில் இடம்பெற்றுள்ள ஏராளமான பொருட்களும் சேவைகளும் ஆகஸ்ட் 9 முதல் செப்டம்பர் 9 வரை மின்னணு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744734

 

------



(Release ID: 1744887) Visitor Counter : 231