நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
விதிமீறலுக்காக மின் வணிக நிறுவனங்களுக்கு 183 நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்கள் கொள்முதலுக்கான விதிகளில் தளர்வு
Posted On:
10 AUG 2021 2:27PM by PIB Chennai
மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்கள் திரு அஷ்வினி குமார் சௌபே மற்றும் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்காணும் தகவல்களை அளித்தனர்.
மின் வர்த்தகப் பரிவர்த்தனை மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நாடு தொடர்பான தகவல்கள் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.
சொந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்ற விதியை மீறியதற்காக மின் வணிக நிறுவனங்களுக்கு கடந்த 12 மாநிலங்களில் 183 நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன.
இயற்கை பேரிடர்களின் போது கோரிக்கையின் அடிப்படையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளில் தளர்வளிக்க அரசு அனுமதித்துள்ளது. உணவு தானியங்களை உரிய விலைக்கு சரியான நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை 2019-20 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் பாதிப்படைந்த, நிறம் மாறிய, முளைக் கட்டிய மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட உணவு தானியங்களை 5 சதவீதம் எனும் அளவில் கொள்முதல் செய்ய தளர்வளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744378
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744376
-----
(Release ID: 1744583)
Visitor Counter : 292