சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஆர் எஃப் ஐ டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்னணு முறையில் சாலை சுங்க வசூல் முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது

Posted On: 09 AUG 2021 2:42PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

சாலைகளில் சுங்க வசூலை எளிதாக்கி போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, வானொலி அலைகள் அடையாள தொழில்நுட்பமான ஆர் எஃப் ஐ டி-ஐ பயன்படுத்தி மின்னணு முறையில் சுங்க வசூல் முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தி, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் சுங்கச் சாவடிகளில் உள்ள அனைத்து வாயில்களையும் ஃபாஸ்டேக் வாயில்களாக அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, ஃபாஸ்டேக் பயன்பாடு சுமார் 96 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வடக்கு சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு, விரிவாக்கம், தரம் உயர்த்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை 310 ஏ-வின் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744025

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744026

*****************



(Release ID: 1744196) Visitor Counter : 239