பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தைத் துவக்கியது எல்லை சாலைகள் அமைப்பு

Posted On: 09 AUG 2021 11:37AM by PIB Chennai

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின்  கொண்டாட்டங்களை எல்லை சாலைகள் அமைப்பு துவக்கியுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தைக் குறிக்கும் வகையில் தேசிய அளவில் 75 மருத்துவ முகாம்கள், 75 இடங்களில் மரம் நடும் நிகழ்ச்சிகள், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 75  பள்ளி உரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு எல்லை சாலைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் 75 உயரிய கணவாய்களில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றுவது முக்கிய நிகழ்வாகும்.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி, உத்தராகண்டின் பிபல்கோட்டி, பிதோராகர் மற்றும் சிக்கிமின் சந்த்மாரில் வீரதீர சாகச விருது வென்றவர்கள் மற்றும் போர் வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை எல்லை சாலைகள் அமைப்பு நடத்தியது. பிதோராகரில் இந்த  அமைப்பின் ஹிராக் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், சௌரியா சக்ரா விருது பெற்ற இஇஎம் பிரேம் சிங், நாயக்  சந்திர சிங், ஓட்டுநர் ராம்சிங் மற்றும் தாமர் பகதூர் ஆகியோரது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743953

********

(Release ID: 1743953)



(Release ID: 1744016) Visitor Counter : 282