உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ஹரியாணா நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இயக்குநரகத்திற்கு டிரோன்கள் பயன்படுத்துவதற்கான அனுமதியை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 03 AUG 2021 3:25PM by PIB Chennai

ஹரியாணா நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இயக்குநரகத்திற்கு டிரோன்கள் (ஆளில்லாத குட்டி விமானங்கள்) பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதியை விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் வழங்கியுள்ளன.

தரவு சேகரிப்பு, படமிடுதல், அம்ருத் நகரங்களின் வளர்ச்சிக்காக இணையம் சார்ந்த புவியியல் தகவல் அமைப்பை செயல்படுத்துதல், ஹிசார், பஞ்ச்குலா, அம்பாலா ஆகிய நகர்ப்புறங்களில் சொத்து வரி ஆய்வு ஆகியவற்றுக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் அல்லது அடுத்த உத்தரவில் எது முன்னதாக வருகிறதோ அது வரை இந்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

அம்பாலா, பகதூர்கர், பிவானி, ஃபரிதாபாத், குருகிராம், ஹிசார், ஜிந்த், கைதால், கர்நால், பல்வால், பஞ்ச்குலா, பானிபட், ரிவாரி, ரோஹ்தக், சிர்சா, சோன்பட், தானேசர் மற்றும் யமுனாநகர் ஆகிய இடங்களில் டிரோன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741850

 

----


(रिलीज़ आईडी: 1742053) आगंतुक पटल : 275
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi