சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பட்டியல் பிரிவினர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோருக்கான இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள்
Posted On:
03 AUG 2021 2:16PM by PIB Chennai
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் திரு ஏ நாராயணசாமி, திருமிகு பிரதிமா பௌமிக் மற்றும் திரு ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கீழ்காணும் தகவல்களை அளித்தனர்.
மத்திய அரசுப் பணியாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் 10 அமைச்சகங்கள்/துறைகளில் உள்ள பட்டியல் பிரிவினர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணிக்கிறது.
2016 டிசம்பர் 31 அன்று பட்டியல் பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 8223, பழங்குடியினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 6955, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 13535 ஆக இருந்தன.
2017 டிசம்பர் 31 அன்று பட்டியல் பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 15090, பழங்குடியினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 13040, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 16078 ஆக இருந்தன.
2018 டிசம்பர் 31 அன்று பட்டியல் பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 13560, பழங்குடியினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 12679, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 15591 ஆக இருந்தன.
2019 டிசம்பர் 31 அன்று பட்டியல் பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 14366, பழங்குடியினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 12612, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 15088 ஆக இருந்தன.
அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு 2014 டிசம்பர் 16 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை எழுதியுள்ள கடிதத்தில், குழு ஒன்றை அமைத்து காலியிடங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் அவற்றை நிரப்புமாறு கேட்டுக்கொண்டது.
அரசுப் பணிக்கான ஆட்சேர்ப்பு பணியை கவனிக்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மிசோராம், தில்லி, ஜம்மு&காஷ்மீர், கோவா, அசாம், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியுள்ளன.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2,14,766 இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ 4,315.15 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் (ஓய்வு) எஸ் ஆர் சின்ஹோ தலைமையில் அரசு அமைத்த பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஆணையம் 2010 ஜூலை 22 அன்று அளித்த அறிக்கையின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அரசு நடத்திய விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான அதிகபட்ச வருவாய் வரம்பு வருடத்திற்கு ரூ 8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பட்டியல் பிரிவு, பழங்குடியின, நாடோடி, நிலமில்லா விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளைப் பயில்வதற்கான உதவித்தொகை வழங்கப்ப்டுகிறது.
பட்டியல் பிரிவு மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டு ரூ 15 கோடியும், 2019-20 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் தலா ரூ 20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சிறப்பான தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை புகுத்துவதற்கு அதிக முதலீடுகள் தேவைப்படுகின்றன.
சுகாதாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் போதிலும், பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உதவுகிறது. ஸ்வச்சத்தா உத்யாமி திட்டத்தின் கிழ் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைக் கருவிகளைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான உதவியை அரசு வழங்குகிறது.
சாக்கடை மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதை தடுப்பதற்காக சஃபாய்மித்ரா சுரக்ஷா சவாலை 246 நகரங்களில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கியது.
மூத்த குடிமக்கள் கண்ணியமான முறையில் வாழ்வதை உறுதி செய்யும் விதமாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டம், 2007 இயற்றப்பட்டது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்க இச்சட்டம் வழி வகுப்பதோடு, மூத்த குடிமக்களை கைவிடும் பிள்ளைகள் அல்லது உறவினருக்கு அபராதமும் விதிக்கமுடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741816
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741814
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741815
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741817
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741818
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741819
-----
(Release ID: 1741979)