சுற்றுலா அமைச்சகம்

பசுமை சுற்றுலாவை, வளர்ச்சிக்கான முக்கிய துறையாக சுற்றுலா அமைச்சகம் கண்டறிந்துள்ளது: மக்களவையில் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தகவல்

Posted On: 02 AUG 2021 2:57PM by PIB Chennai

பசுமை சுற்றுலாவை வளர்ச்சிக்கான முக்கிய துறையாக சுற்றுலா அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

நிலையான வாழ்வாதாரங்களின் ஆதாரமாக விளங்கவும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும் நிலைத்தன்மை வாய்ந்த சுற்றுலாவுக்கு பிரம்மாண்டமான சாத்தியக்கூறுகள் இருப்பதை சுற்றுலா அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, பசுமை சுற்றுலாவில் கவனம் செலுத்தும் நிலைத்தன்மை வாய்ந்த சுற்றுலாவை உருவாக்குவதற்கான தேசிய கேந்திர வரைவு திட்டத்தை அமைச்சகம் வடிவமைத்தது.

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மேம்பாட்டிற்காக கண்டறியப்பட்டுள்ள 15 சுற்றுலா பிரிவுகளுள் பசுமை சுற்றுலாவும் வனவிலங்கு சுற்றுலாவும் அடங்கும்.

இந்தத் திட்டத்தின்படி மாநில அரசுகள்/ யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, வளர்ச்சிக்கான திட்டங்கள் கண்டறியப்படுகின்றன. அதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு மற்றும் இதர அம்சங்களின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படும். குஜராத் மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் ரூ. 179.68 கோடி மதிப்பில் 3 திட்டங்களுக்கும், பிரசாத் தேசிய இயக்கத்தின் கீழ் ரூ. 105.56 கோடி மதிப்பில் 3 திட்டங்களுக்கும் சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741470

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741469

*****************

 



(Release ID: 1741506) Visitor Counter : 244