நித்தி ஆயோக்

அடல் புத்தாக்க திட்டம், நாடு முழுவதும் 2 மாத கால ‘ஏடிஎல் டிங்கர் தொழில் முனைவோர் துவக்க முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்தது

प्रविष्टि तिथि: 31 JUL 2021 2:08PM by PIB Chennai

டிஜிட்டல் திறன்களை வளர்க்க, நாடு முழுவதும் முதல் முறையாக தொடங்கப்பட்ட, இரண்டு மாத கால ஏடிஎல் டிங்கர்தொழில் முனைவு கோடைகால துவக்க முகாமை நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்க திட்டம்  வெற்றிகரமாக நிறைவு செய்தது.

நாடு முழுவதும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட, ‘ஏடிஎல் டிங்கர் தொழில் முனைவோர்பயிற்சியில் சாதனை அளவாக 9000க்கும் மேற்பட்டோர் ( 32 மாநிலங்கள் 298 மாவட்டங்களைச் சேர்ந்த 4000க்கும்  மேற்பட்ட பெண்கள் உட்பட) பங்கேற்றனர்.

இந்த துவக்க முகாமில்,  820 அடல் டிங்கரிங் பரிசோதனைக் கூடத்தை(ஏடிஎல்) சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்,  50க்கும் மேற்பட்ட நிபுணர்கள் நேரடியாக  உரையாற்றினர். 4.5 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த துவக்க முகாமை பார்வையிட்டனர். இதன் மூலம் 30க்கும்  மேற்பட்ட டிஜிட்டல்  மற்றும் தொழில்முனைவு திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டது. 

மாணவர்கள் தங்கள் ஏடிஎல் பொறுப்பாளர்கள், மற்றும் வழிகாட்டிகளுடன் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்கள் தங்களின் சொந்த டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் முயற்சிகளை உருவாக்க, பதிவு செய்தவர்கள் அனைவருக்கும், டிஜிட்டல் களஞ்சியம் மற்றும் தொழில்முனைவோர் கற்றல் வளங்கள், தாங்களாகவே செய்ய வேண்டிய உள்ளடக்கம், எளிய பணிகள் போன்றவை வழங்கப்பட்டன.

இறுதி பயிற்சியில், ஒன்றாக இணைந்து புத்தாக்க மனநிலையை வளர்ப்பது குறித்து வலியுறுத்தப்பட்டதாக நிதி ஆயோக் திட்ட இயக்குனர் டாக்டர் சின்தன் வைஷ்னவ் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741007

*****************


(रिलीज़ आईडी: 1741074) आगंतुक पटल : 535
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu