தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நியூஸ் ஆன் ஏர் வானொலி நேரலை செயலியின் பயன்பாட்டில் நாட்டிலேயே சென்னை 4-வது இடம்

Posted On: 30 JUL 2021 2:31PM by PIB Chennai

 ‘நியூஸ் ஆன் ஏர்செயலி மூலம் ஒலிபரப்பப்படும் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளை ஜெய்ப்பூர் மற்றும் பாட்னாவில் உள்ள இளைஞர்கள் விரும்பி கேட்கிறார்கள். இந்த நகரங்களில் உள்ள அகில இந்திய வானொலி நேரலை நேயர்களில் 60 சதவீதத்தினர் 18 முதல் 45 வயதினர் ஆவார்கள். முக்கிய நகரங்களுக்கான நியூஸ் ஆன் ஏர் தரவரிசை அளவீடுகளில் இது ஒரு புதிய மற்றும் சுவாரசியமான விஷயமாகும்.

அகில இந்திய வானொலியின் மராத்தி ஒலிபரப்பைத் தவிர, கன்னட மற்றும் இந்தி நிகழ்ச்சிகளும் புனேவில் விரும்பி கேட்கப்படுவதால், புனே ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட மாநகரமாக இருப்பது தெளிவாகிறது.

நியூஸ் ஆன் ஏர் விரும்பி கேட்கப்படும் முதல் பத்து நகரங்களாக புனே, பெங்களூரு, ஹைதரபாத், சென்னை, மும்பை, தில்லி என்சிஆர், எர்ணாகுளம், ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் பாட்னா ஆகியவை உள்ளன.

அதிகமாக விரும்பி கேட்கப்படும் நிலையங்களில் அகில இந்திய வானொலி கொடைக்கானல் ஏழாவது இடம் பிடித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நியூஸ் ஆன் ஏர் நிகழ்ச்சிகளை கேட்பவர்களில் 7 சதவீதம் பேர் 18 முதல் 24 வரையிலான வயதினராகவும், 14 சதவீதம் பேர் 25 முதல் 34 வரையிலான வயதினராகவும், 12 சதவீதம் பேர் 35 முதல் 44 வரையிலான வயதினராகவும், 18 சதவீதம் பேர் 45 முதல் 54 வரையிலான வயதினராகவும் உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740660

*****************



(Release ID: 1740805) Visitor Counter : 182