வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு உதவி பெற்ற திட்டங்கள் குறித்து அமைச்சரின் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUL 2021 2:40PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்.

அயல்நாட்டு/வெளிப்புற உதவி பெற்ற ஒரே ஒரு திட்டம் தான் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ 2144.56 கோடி மொத்த மதிப்பீட்டிலான வடகிழக்கு சாலை வசதி மேம்பாட்டு திட்டம்-வெளிப்புற உதவி பெற்ற திட்டம் (முன்னதாக இது வட கிழக்கு மாநிலங்கள் சாலைகள் முதலீட்டு திட்டம் என்று அழைக்கப்பட்டது) ஆசிய வளர்ச்சி வங்கியின் $200 மில்லியன் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்களில் 12 சாலை துணை திட்டங்கள் மற்றும் 5 பாலங்களுடன் கூடிய 433.7 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகளின் மேம்பாடு/சீரமைப்பு/கட்டமைப்பு இத்திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் (2019-20 மற்றும் 2020-21) வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பயன்படுத்தப்படாமல் எதுவும் இல்லை.

2019-20-ல் பட்ஜெட் மதிப்பிடு ரூ 3000 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 2670 கோடியாகவும் இருந்த நிலையில், செலவு ரூ 2669.72 கோடியாக இருந்தது.

2020-21-ல் பட்ஜெட் மதிப்பிடு ரூ 3048.73 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 1860 கோடியாகவும் இருந்த நிலையில், செலவு ரூ 1859.99 கோடியாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740307

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740267

*****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1740404) வருகையாளர் எண்ணிக்கை : 161
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Punjabi , Telugu