வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக காய்கறிகள் ஏற்றுமதி
Posted On:
26 JUL 2021 3:24PM by PIB Chennai
உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக இன்று காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஹரித்துவார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெண்டைக்காய், பாகற்காய், பேரிக்காய், கருவேப்பிலை ஆகியவை துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.
உத்தராகண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தினை வகைகள் கடந்த மே மாதம் டென்மார்க்குக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கிருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபெடா) தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
2020-21ம் ஆண்டில், இந்தியா ரூ.11,019 கோடிக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ.10,114 கோடியாக இருந்தது. தற்போது காய்கறி பழங்கள் ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739057
-----
(Release ID: 1739185)
Visitor Counter : 379