குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில் தகவல்
Posted On:
26 JUL 2021 2:26PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின் மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானே கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன்.
* எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள்.
* எம்எஸ்எம்இ நிதி மூலம் Rs. 50,000 கோடி பங்குத் தொகை உட்செலுத்துதல்.
* இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI) ரூ.15,000 கோடி சிறப்பு மறுநிதியளிப்பு வசதி.
* சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி.
* இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப்புழக்க திட்டம்.
* வங்கிசாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, வரிசெலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
* வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப்பட்டது.
* விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு.
* பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன.
* வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது.
* வருமானவரி சட்டத்தின் 6ஏ-பி பிரிவின் கீழ் பலவிதமான முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.
* தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்:
காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம் நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம், தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.
காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739024
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739023
-----
(Release ID: 1739184)
Visitor Counter : 372