எரிசக்தி அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவம்: மின் பயன்பாடுகளின் முக்கிய ஒழுங்குமுறை அளவுருக்கள் அறிக்கையை வெளியிட்டனர் மத்திய மின்துறை அமைச்சர்கள்

Posted On: 25 JUL 2021 7:10PM by PIB Chennai

ஊரக மின்மயமாக்க கார்ப்பரேஷன் நிறுவனத்தின்  (REC) 52வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ள ஆர்இசி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தை மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் தொடங்கி வைத்தார். அப்போது இத்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், மின்துறை செயலாளர் திரு. அலோக் குமார், ஆர்இசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு சஞ்சய் மல்கோத்ரா மற்றும் மின்துறை அமைச்சக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, மின் பயன்பாடுகளின் முக்கிய ஒழுங்குமுறை அளவுருக்கள் குறித்த அறிக்கையையும், மத்திய அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. ஆர்.கே.சிங், 52வது நிறுவன தினத்தை முன்னிட்டு  ஆர்இசி நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு கிராமத்துக்கும், குக்கிராமத்துக்கும் குறுகிய காலத்தில்  மின் இணைப்பு வழங்கி, மின்துறையில் ஆர்இசி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய மின்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் பேசுகையில், ஆர்இசி நிறுவனம், நாடு முழுவதும் உள்ள தனது 22 அலுவலகங்கள் மூலம் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு, மின் உற்பத்தியையும், மின் விநியோகத்தையும் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளை உருவாக்குவதில் நிதியுதவியை அளித்துள்ளது என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின் சாதனைகள், ஆர்இசி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி நடவடிக்கைகள் குறித்த சிறுபுத்தகமும் வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738847

---



(Release ID: 1738871) Visitor Counter : 249


Read this release in: English , Urdu , Hindi , Punjabi