எரிசக்தி அமைச்சகம்
‘சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவத்தின்’ ஒரு பகுதியாக 33/11 கிலோவாட் 10 எம்விஏ துணை மின் நிலையம் ஜம்மு&காஷ்மீரில் உள்ள பந்திப்பூராவில் திறந்து வைக்கப்பட்டது
Posted On:
24 JUL 2021 6:52PM by PIB Chennai
இந்திய அரசின் ஐடிபிஎஸ் திட்டத்தின் கிழ் நிறுவப்பட்ட 33/11 கிலோவாட் 10 எம்விஏ துணை மின் நிலையம் ஜம்மு&காஷ்மீரின் பந்திப்பூராவில் உள்ள நுஸ்ஸோவில் திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடர்பு முகமையாக பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆவதை குறிக்கும் ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ ஒரு பகுதியாக திறப்புவிழா நிகழ்ச்சி அமைந்தது.
ஜம்மு&காஷ்மீர் மின்சாரத் துறை முதன்மை செயலாளர் திரு ரோஹித் கன்சால், கேபிடிசிஎல் நிர்வாக இயக்குநர் டாக்டர் பஷாரத் காவூம், பந்திப்பூரா மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஓவாய்ஸ் அகமது உள்ளிட்டோர் இத்திட்டத்தை திறந்து வைத்தனர்.
ரூ 3.85 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த துணை மின் நிலையமானது, நிஷாத் பந்திப்பூரா, பாகி பந்திப்பூரா, நுஸ்ஸோ, லங்க்ரேஷரா, பப்சன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 2400-க்கும் அதிகமான வீடுகளுக்கு பலனளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738649
*****************
(Release ID: 1738672)
Visitor Counter : 219