தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நியூஸ் ஆன் ஏர் செயலியில், ரேடியோ நிகழ்ச்சிகளின் நேரடி ஒலிபரப்பின் உலகளாவிய தரப்பட்டியல்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் முன்னேற்றம்

Posted On: 23 JUL 2021 1:31PM by PIB Chennai

நியூஸ்ஆன்ஏர் செயலியில் ஒலிபரப்பப்படும் அகில இந்திய ரேடியோ நிகழ்ச்சிகளின் உலகளாவிய தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 2ம் இடத்துக்கும், பிஜி 4-வது இடத்துக்கும், இங்கிலாந்து 3-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளன

தரவரிசை பட்டியலில் முக்கிய மாற்றமாக கொடைக்கானல் அகில இந்திய வானொலி, 8வது இடத்திலிருந்து 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ரெயின்போ கன்னடா காமன்பிலு, தமிழ் அகில இந்திய வானொலியை பின்னுக்கு தள்ளி 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

எப்.எம் கோல்ட் தில்லி மற்றும் எப்.எம் ரெயின்போ தில்லி ஆகியவை தெற்கு பசிபிக்-ன் குக் தீவில் பிரபலமாக உள்ளன. கன்னடா அகில இந்திய வானொலி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் விருப்ப சேனலாக உள்ளது. விவித் பாரதி, பஞ்சாபி அகில இந்திய வானொலி ஆகிய சேனல்கள் பாகிஸ்தானில் மிக பிரபலமாக உள்ளன. ஐக்கிய அரபு  எமிரேட்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் கத்தாரில்  அகில இந்திய வானொலியின் மலையாள சேனல் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலியின் 230 சேவைகள் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன. இதை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் 8000 நகரங்களில் மக்கள் கேட்கின்றனர்.

முன்னணி நாடுகளில் அகில இந்திய வானொலியின் நேரடி நிகழ்ச்சிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளதை கீழ்கண்ட இணைப்பில் விரிவாக காணலாம். இந்த தரவரிசை கணக்கீடு 2 வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த தரவுகளில் இந்தியா சேர்க்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738079

                                                                                           -----



(Release ID: 1738246) Visitor Counter : 209