வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு பகுதிக்கான பொருளாதார திட்டங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2021 3:13PM by PIB Chennai

வடகிழக்கு பகுதிக்கான பொருளாதார திட்டங்களை, மாநிலங்களவையில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி இன்று தெரிவித்தார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

2020ம் ஆண்டு செப்டம்பரில் 17 பகுதிகளின் வளர்ச்சிக்கு 17 துணைக்குழுக்களை நிதி ஆயோக் அமைத்தது. வட கிழக்கு பகுதி திட்டங்களுக்கான மதிப்பீட்டை சம்பந்தப்பட்ட துறைகளும், அமைச்சகங்களும்  மேற்கொண்டன. வடகிழக்கு பகுதி மற்றும் வட கிழக்கு கவுன்சில் வளர்ச்சி அமைச்சகத்தால் அமல்படுத்தப்பட்ட திட்டங்களின் மூன்றாம் நபர் மதிப்பீடு முடிவடைந்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கு வடகிழக்கு பகுதி திட்டங்களுக்கு 54 அமைச்சகங்கள்துறைகளால் ரூ.68,020 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மேலும், கொவிட் இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில், இந்திய பொருளாதாரத்துக்கு உதவகடந்த ஜூன் மாதம், ரூ.6.29 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண நிதியை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பொது சுகாதாரம் வலுப்படும். வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வடகிழக்கு பகுதிக்கு பயனளிக்கும்.

ரூ.313.98 கோடி மதிப்பில் 11 திட்டங்களுக்கு வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737706

----


(வெளியீட்டு அடையாள எண்: 1737879) வருகையாளர் எண்ணிக்கை : 248
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Punjabi , Telugu