பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படை வீரர்கள் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர்

Posted On: 22 JUL 2021 3:32PM by PIB Chennai

விமானப்படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் (நான்கு போட்டியாளர்கள் மற்றும் ஒரு நடுவர்) 25 வருடங்களுக்கு பிறகு 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்திய விமானப்படை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், நாட்டின் சார்பாக ஒலிம்பிக்கில் அதன் வீரர்கள் பங்கேற்பது பெருமையாக உள்ளது என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் தடகள பிரிவை சேர்ந்த சார்ஜெண்ட் ஷிவ்பால் சிங் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கு பெறுகிறார். சீனாவில் உள்ள வூஹானில் நடைபெற்ற ராணுவ உலகக் கோப்பை போட்டியில் இவர் தங்கம் வென்றுள்ளார்.

இந்திய விமானப்படையின் தடகள பிரிவை சேர்ந்த சார்ஜெண்ட் நோவா நிர்மல் டோம் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் 4*400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெறுகிறார்.

இந்திய விமானப்படையின் துப்பாக்கி சுடுதல் பிரிவை சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆஃபிசர் தீபக் குமார் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீட்டர்  துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெறுகிறார். கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை இவர் வென்றுள்ளார்.

இந்திய விமானப்படையின் தடகள பிரிவை சேர்ந்த சிபிஎல் அலெக்ஸ் அந்தோணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் 4*400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெறுகிறார். 2021 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான தடகள போட்டிகள் மற்றும் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் உள்ளிட்டவற்றில் இவர் பங்கேற்றுள்ளார்.

இந்திய விமானப்படையின் மாஸ்டர் வாரண்ட் ஆஃபிசர் அசோக் குமார் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிக்கான நடுவராக பங்குபெறுகிறார். அடுத்தடுத்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்திய நடுவர் இவராவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737720

 

---



(Release ID: 1737869) Visitor Counter : 225